தஞ்சை மருத்துவமனை கல்லூரி அவசர சிகிச்சை பிரிவில் நேற்று முன் தினம் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் கிடந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அன்று மருத்துவமனைக்கு வந்த 230 பேரில் 20 பேர் மருத்துவர்களிடம் சொல்லாமல் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த 20 பேரின் தகவல்களையும் சேகரிக்க தொடங்கினர்.
அப்போடு அந்த கழிவறை அருகில் உள்ள சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்த போது இளம்பெண் ஒருவர் அந்த கழிவறைக்கு சென்று 1 மணி நேரம் கழித்து வெளியே வருவதும் தெரியவந்தது.
அந்த பெண் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த பெண் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண் தஞ்சை மாவட்டம் ஆலக்குடியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பது தெரியவந்தது.
அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்படுள்ளதாவது ,
திருப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு அங்கு வேலைபார்க்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பிரியதர்ஷினி கர்பமானார் இதனை அவர் அந்த இளைஞரிடம் பல முறை கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை.
கருவை கலைக்காமல் இருந்ததால் பயந்து போன அவர் கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சை வந்த அவர் உள்நோய் இருப்பதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இதனை அடுத்து, அவருக்கு பிரசவ வலி ஏற்படவே கழிவறைக்கு சென்று சுயமாக பிரசவம் பார்த்து கொண்டார்.
இதனை அடுத்து, அந்த குழந்தையை எடுத்து சென்றால் அவமானம் ஏற்படும் என்பதால் குழந்தையை அவர் பிளஷ்டேங்கில் போட்டு விட்டு வந்ததாக கூறினார். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.