இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
முதல் போட்டி டிரா ஆன நிலையில் இரண்டாவது போட்டி கடந்த 3ஆம் திகதி தொடங்கியது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 325 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு சுருண்டது.
அடுத்து விளையாடிய இந்தியா 7 விக்கெட்கள் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் தொடரை 1- 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்த போட்டியில் பேட்டிங்கில் 150 மற்றும் 62 ரன்கள் எடுத்து மிரட்டிய மாயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே போல இந்த டெஸ்ட் தொடரில் விக்கெட்களை குவித்த அஸ்வின் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றுள்ளார்.
அதே போல அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் 50 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.