இந்திய நட்சத்திர ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் வரிசையாக பல சாதனைகளை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என இந்தியாவிடம் ஒயிட் வாஷ் ஆன நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 1-0 என இழந்துள்ளது.
மும்பையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
தொடர் நாயகன் விருதை இந்திய நட்சத்திர வீரர் அஸ்வின் தட்டிச்சென்றார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் மொத்தம் 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 9 முறை தொடர் நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் ஜாக் கலிஸை (166 டெஸ்ட் போட்டிகளில், 9 தொடர் நாயகன் விருது) அஸ்வின் சமன் செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியல்:
முரளிதரன் (133 டெஸ்ட் போட்டிகளில், 11 தொடர் நாயகன் விருது)
அஸ்வின்* ( (81 டெஸ்ட் போட்டிகளில், 9 தொடர் நாயகன் விருது)
கலிஸ் (166 டெஸ்ட் போட்டிகளில், 9 தொடர் நாயகன் விருது)
Richard Hadlee (86 டெஸ்ட் போட்டிகளில், 8 தொடர் நாயகன் விருது)
இம்ரான் கான் ((88 டெஸ்ட் போட்டிகளில், 8 தொடர் நாயகன் விருது).
இதுமட்டுமின்றி நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட தொடரில் அபாரமாக விளையாடியதின் மூலம் அஸ்வின் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இன்னிங்ஸில் ஹென்றி நிக்கோல்ஸை அஸ்வின் அவுட்டாக்கியதன் மூலம் நியூசிலாந்தை 2வது இன்னங்ஸில் 167 ரன்களுக்கு சுருட்டி இந்திய அபார வெற்றிப்பெறற்து.
ஹென்றி நிக்கோல்ஸ் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், சொந்த (இந்திய) மண்ணில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
இந்தியாவில் அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியல்:
அனில் கும்ப்ளே (350)
அஸ்வின்* (300)
ஹர்பஜான் சிங் (265)
கபில் தேவ் (219)
அதுமட்டுமின்றி, இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்குப் பிறகு சொந்த மண்ணில் மிக வேகமாக 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.
சொந்த மண்ணில் மிக வேகமாக 300 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியல்:
முரளிதரன் (48 போட்டிகள்)
அஸ்வின்* (49 போட்டிகள்)
அனில் கும்ப்ளே (52 போட்டிகள்)
ஷேன் வார்ன் (65 போட்டிகள்)
அடுத்தபடியாக, இந்தியா-நியூசிலா்நது இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.
நியூசிலாந்து ஆல் ரவுண்டர் Richard Hadlee 24 இன்னிங்ஸில் 66 விக்கெட்டுகள் எடுத்திருந்த நிலையில், தற்போது 17 இன்னிங்ஸில் 66 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் Richard Hadlee சாதனையை முறியடித்துள்ளார்.