ஐசிசி நிர்வாகம் சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் அணி தரவரிசை பட்டியல்:
இந்தியா ( 124 ரேட்டிங் )
நியூசிலாந்து ( 121 ரேட்டிங்)
ஆஸ்திரேலியா ( 108 ரேட்டிங்)
இங்கிலாந்து ( 107 ரேட்டிங்)
பாகிஸ்தான் ( 92 ரேட்டிங்)
தென் ஆப்பிரிக்கா ( 88 ரேட்டிங்)
இலங்கை (83 ரேட்டிங்)
வெஸ்ட் இண்டீஸ் ( 75 ரேட்டிங்)
வங்க தேசம் ( 49 ரேட்டிங்)
ஜிம்பாப்வே ( 31 ரேட்டிங்)