உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் சீனா முதல் இடத்திற்கு முன்னேறியது. கொரோனா தொற்றுக் காலத்தில் அனைத்து நாடுகளின் வர்த்தகமும் பாதிக்கப்பட்ட நிலையில், சீனா கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வந்து, உற்பத்தியை அதிகரித்துப் பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியைப் பதிவு செய்து மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடுகள் பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி சீனா முதல் இடத்திற்கு முன்னேறியது.
அத்தோடு, லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள ஆசியா பவர் இன்டெக்ஸ் பட்டியலில் வழக்கம்போல் சீனா முதல் இடத்தில் உள்ளது.
சீனாவுடன் போட்டிபோடும் இந்தியா 4ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் முன்னேறியுள்ளது. 2021இல் இந்தியாவில் மதிப்பீடு பெரிய அளவில் சரிந்துள்ளது.
இது இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனால் எதிர்கால வளர்ச்சி அளவீடுகளை பொறுத்த வரையில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் உலகளவில் உள்ளது.
லோவி இன்ஸ்டிடியூட் 2030ஆம் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் கணிப்பில் இது வெளியாகியுள்ளது.
இந்தியா பாதுகாப்புக் கூட்டணியில் 7ஆவது இடத்தில் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக் கூட்டணியில் 8ஆவது இடத்தில் உள்ளது. இவ்விரண்டு காரணிகளாலும் இந்தியா இரு திசைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக லோவி இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
2020 முதல் 2021 வரையில் இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து முடக்கம், வர்த்தகப் பாதிப்பு, உற்பத்திப் பாதிப்பு எனப் பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில், சீனா உடனான எல்லை பிரச்சினை அதன் மூலம் ஏற்பட்ட பதற்றம் ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனாலேயே இந்தியா 4ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.