Loading...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த மாணவர்களின் இரண்டாம் அரையாண்டுகளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மீண்டும் நாளை (பெப்ரவரி மாதம் முதலாம் திகதி) முதல் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
கலைப்பீட பதில் பீடாதிபதி பேராசிரியர் சுபாதினி ரமேஷ் இன்று இதனை அறிவித்துள்ளார்.
கலைப்பீடத்துக்கு தெரிவான புதிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு மற்றும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Loading...