காதலியின் தகாத படத்தை, இணையளத்தில் பதிவேற்றம் செய்து , தலைமறைவாகியிருந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வெட்டமண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது காதலியை அறையொன்றுக்கு அழைத்துச் சென்ற காதலன், அப்பெண்ணை தகாத முறையில் எடுக்கப்பட்ட படத்தை, இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதன்பின்னர், அங்கிருந்து தலைமறைவாகி கொழும்பில் மறைந்து இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மொனராகலை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் குழுவினர், பாதிக்கப்பட்ட யுவதி பேசுவதைப் போல, தொலைப்பேசி அழைப்பை எடுத்து, இளைஞனை ஒக்கம்பிட்டியவுக்கு வரவழைத்துள்ளனர்.
அழைப்பை ஏற்று ஒக்கம்பிட்டிய வீட்டுக்கு. இளைஞன் வரும்போது, இடைநடுவிலேயே மறித்த பொலிஸார், அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த , பல பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்த நிலையில் அச்சம்பவங்களுக்காக தேடப்பட்டவர் என்றும் அறியமுடிகின்றது.
அதோடு அப்பெண்களின் புகைப்படங்களை உறவினர்கள் மற்றும் இணையத்தளங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளமையும் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக,புத்தள பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.