ஆந்திர மாநிலம் பிரகாஷ் நகர் பகுதியில் வசித்து வருபவர் தோமன் சின்னா ராவ். பல சமூகவிரோத செயல்களில் ஈடுப்பட்டு வந்த அவர் என்ஜிஓ ஒன்றை தொடங்கி உள்ளார். இந்நிலையில், அங்கிருக்கும் பள்ளி ஒன்றிற்கு சென்ற அவர் அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு ரப்பர் பென்சில், பேனா ஆகியவை கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து அங்கு படிக்கும் சில ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் வீட்டிற்கு வந்தால் பென்சில், ரப்பர் தருவதாக ஆசை காட்டியுள்ளார். அந்த குழந்தைகளும் ரப்பர் கிடைக்கும் ஆசையால் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அஅவரின் வீட்டிற்கு வந்த சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதனால், பயந்து போன சிறுமிகள் அங்கிருந்து வீட்டிற்கு சென்று அவர்களின் தாய்மார்களிடம் கூறியுள்ளனர். ஆத்தரமடைந்த அவர்கள் தோமன் சின்னா ராவ் வீட்டிற்கு சென்று அவரை சாலையில் இழுத்து போட்டு கடுமையாக தாக்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை அவர்களிடம் இருந்து காப்பாற்ற முயன்றனர். இதுகுறித்து அந்த தாய்மார்கள் தெரிவிக்கையில், தோமன் சின்னா ராவ் அரசியல்வாதிகளின் தொடர்ப்பு இருப்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பயப்படுவதாக தெரிவித்துள்ளனர்.