மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கின்ற ஒரு பெண் மருத்துவர் திருமணமாகி தனது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் தனியாக கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த கிளினிக்கில் மருத்துவரின் காதலர் அடிக்கடி சந்திக்க வருவாராம்.
ஓமன் நாட்டில் இருக்கும் அந்த காதலர் பெண் மருத்துவரை சந்திப்பதற்காகவே அங்கிருந்து கிளம்பி வருவார் என்று கூறப்படுகிறது. தனது காதலர் தன்னை பார்க்க வரும் பொழுது மருத்துவர் ஒரு நர்சை காவலுக்கு வைத்து விட்டு தனது காதலருடன் உல்லாசமாக இருந்து வருவார்.
மருத்துவரின் இந்த உல்லாச வாழ்க்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த நர்ஸ், டாக்டர் தனது காதலனுடன் உல்லாசமாக இருப்பதை ரகசிய கேமரா கொண்டு வீடியோ எடுத்துள்ளார். பின்னர் மருத்துவருக்கு அந்த வீடியோவை அனுப்பி பணம் கேட்டு பிளாக்மெயில் செய்துள்ளார்.
அவர் கேட்டது என்னவோ 5 லட்ச ரூபாய் தான். ஆனால், அதை கொடுத்துவிட்டு மீண்டும் மீண்டும் இப்படி மன உளைச்சலில் இருக்க வேண்டுமா என்று எண்ணிய பெண் மருத்துவர் தீவிரமாக யோசனை செய்த வந்துள்ளார். அதே நேரத்தில் அந்த நர்ஸ் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து மருத்துவருக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கியுள்ளார்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த டாக்டர் உடனடியாக இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் நர்ஸ் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரகசிய கேமரா மற்றும் மெமரி கார்டு உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி இருக்கின்றனர்.