நுவடிரலியா ஆற்றிலிருந்து பெண் ஒருவரிக் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா, ருவான் எலியா, பன்சல வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய புஞ்சிபண்டாரகே மெனிகாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது மகள் மற்றும் மருமகன்களுடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இரவு உறங்கிக் கொண்டிருந்த தாய் காலையில் பார்க்கும் பொழுது வீட்டில் இல்லை என உயிரிழந்த பெண்ணின் மகள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து தேடுதல் மேற்கொண்ட போது வீட்டிற்கு அருகில் உள்ள பிளாக்பூல் ஆற்றில் சடலமாக மிதந்துள்ளார்.
இவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் நுவரெலியா காவல்துறையினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக மலையப் பகுதி ஆறுகளில் சடலங்கள் மீட்கப்படுவது அதிகரித்து காணப்படுகின்றது. இருப்பினும் அவர்களின் மரணங்களுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமான நிலையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.