திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ஏழனை பாண்டி. இவர் கோவையில் பணிபுரியும் போது பெண்காவலர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண் காவலருடன் ஏழனை பாண்டி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். ஏழனை பாண்டிக்கு பணி மாறுதல் கிடைத்தது மேலும் , அந்த பெண் காவலர் அவருடன் தொடர்பை துண்டித்துள்ளார்.
ஏழனை பாண்டி அந்த பெண் காவலருடன் மீண்டும் தொடர்ப்பை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த பெண் காவலர் அதற்கு ஓப்புகொள்ளாததால் ஆத்திரமடைந்த ஏழனை பாண்டி அந்த காவலருடன் எடுத்து கொண்ட அந்தரங்க புகைபடங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி அந்த காவலரின் கணவருக்கும் அந்த புகைபடங்களை அனுப்பி மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் காவலர் சைபர் கிரைமில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து ஏழனை பாண்டி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.