Loading...
திருப்பூர் மாவட்டம், வடுகபாளையம் புதூரை சேர்ந்தவர் குமார் (65). இவர் அவரின் வீட்டின் அருகே வசித்து வந்த 8 வயது சிறுமியுடன் அன்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமியிடம் திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனால், பயந்து போன அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டு அங்கு வந்த சிறுமியின் பெற்றோர் முதியவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
Loading...
இதனை அடுத்து அந்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Loading...