கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவ மற்றும் 13 பேருடன் இன்று பிற்பகலில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டது.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே அந்த ஹெலிகாப்டர் பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. விழுந்து நொறுங்கிய உடன், ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக மலைவாழ் கிராம மக்கள் முதலில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், இராணுவம், காவல்துறை, மீட்புப்படையினர் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் ராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிர் இழந்தவர்களின் முகம் தீயில் கருகியதால் அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.