தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென். கிளயார் பகுதியில் இன்று அதிகாலை காரொன்று கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குளாகியுள்ளது.
அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி படுங்காயமரமந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் சென்.கிளயார் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி காரில் சாரதி மட்டும் பயணித்துள்ள நிலையில் அவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாகவும், இதனால் அவரின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.