விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இதில் கண்ணம்மாவாக ரோஷ்னி ஹரிப்ரியன் நடித்துவந்தார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னதாக ரோஷினி ஹரிப்ரியன் நிறைய யூடியூப் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து இருக்கிறார்.
அப்போதெல்லாம் கிடைக்காத புகழ் அவருக்கு விஜய் டிவியின் மூலமாகத்தான் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது ரோஷினி ஹரிப்ரியனுக்கு வெள்ளித்திரையில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறி சமீபத்தில் அவர் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார்.
இத்தகைய நிலையில், இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தை பிரபல மாடல் அழகி வினுஷா தேவி ரிப்லேஸ் செய்து வருகின்றார். இவர் அச்சு அசலாக ரோஷிணி ஹரிப்ரியன் போலவே இருப்பதால் உடனே கண்ணம்மாவாக அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.
A post shared by Lisha (@lisha_hema)
இந்நிலையில், இந்த சீரியலில் புதிதாக அறந்தாங்கி நிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சீரியலின் குழந்தை நட்சத்திரம் ஹேமாவுடன், அறந்தாங்கி நிஷா இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.