இந்திய கிரிக்கெட அணியின் ஒரு நாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் கோலி அதிரடி முடிவு எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி20 கோப்பை தொடருக்கு பிறகு கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகி பின் இந்திய அணியின் டி20 கேப்டன் பதவி ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கோலியை நீக்கி, அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவை கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இம்மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இதில், இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக கோலியும், ஒரு நாள் மற்றும் டி20 அணி கேப்டான ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் தொடரை தொடர்ந்து நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலிருந்து விலக கோலி முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது.