ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் ககோஷிமா பகுதியில் இன்று காலை இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 20 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் இந்நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சில பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் கூறப்படுகிறது.