குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் பிபின் ராவத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி சாய் தேஜ் மரணமடைந்த சம்பவத்தில் கிராமம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே ஏற்பட்ட விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மரணம் அடைந்தவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள எகுவரகட்டா கிராமத்தை சேர்ந்த சாய் தேஜ் என்பவர் ஆவார்.
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த சாய்தேஜ் கடந்த 2013 ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த இவர் பாதுகாப்புப் படையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றினார். பிபின் ராவத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக சாய் தேஜ் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் சாய் தேஜ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாய் தேஜ்க்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சாய் தேஜ் கடைசியாக விநாயக சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.