Loading...
மதுரை மாவட்டம், எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் 35 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் ஓடும் பேருந்தில் ஏற முயன்றார்.
அப்போது அவர் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆவ்ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
Loading...
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்தில் பயணம் செய்ய வேண்டாம் என பல முறை எச்சரிக்கை விடுத்தும் இதுபோன்ற பல உயிரிழப்புகள் ஏற்படுவதாக காவலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
Loading...