இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 75% முடிவடைந்துவிட்ட நிலையில் வரும் டிசம்பர் இறுதிக்குள் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷூட்டிங்கை தொடர்ந்து படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பீஸ்ட் படம் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பீஸ்ட் படத்தின் நூறாவது நாள் ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து இயக்குனர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள பூஜா ஹெக்டேவின் காட்சிகள் முடிவடைந்துள்ளதாக இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.