கேரள மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சுரேஷ் இவருக்கு திருமணமாகி நிஷா என்ற மனைவியும் 3 பெண் குழந்தை மற்றும் 2 ஆண் குழந்தையும் உள்ளது. நிஷா ஆறாவது குழந்தைகளுடன் மீண்டும் கர்ப்பமானார்.
அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது இந்தநிலையில் அவரின் வீட்டில் உள்ள குளியலறையில் அந்த குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் இருப்பதாலும் வறுமையின் காரணமாக 6வது குழந்தைய வளர்க்க முடியாது என்பதால் தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து குழந்தையை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது