Loading...
இஸ்ரேலில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
70வது பிரபஞ்ச அழகிகள் போட்டி இஸ்ரேலில் உள்ள ஈலாட் நகரில் நடைபெற்றது.
இதில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து என்பவரும் கலந்துக் கொண்டார்.
இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஈகுவடார் நாடுகளை சேர்ந்த அழகிகளோடு போட்டியிட்ட ஹர்னாஸ் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.
பட்டம் வென்ற அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பெண்ணுக்கு பிரபஞ்ச அழகி பட்டம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...