Loading...
பண்டாரவளை – தியத்தலாவை இராணுவ கல்வியல் கல்லூரி முகாமில் பழைய கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சுவர் இடிந்து இராணுவ வீரரின் மேலே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Loading...
மடுல்சீமை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான இராணுவ வீரரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இராணுவ வீரரின் சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தியத்தலாவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...