பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் இன்று காலை விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான டலஸ் அழகபெரும, ரமேஷ் பத்திரன மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன் காரணமாக இன்றைய தினம் அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறாதென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் நோக்கி சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விசேட கலந்துரையாடலின் போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.