யாழ்ப்பாணத்தில் 38 வயதான தாயொருவர் கொரொனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (38) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
இவருக்கு 6 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் மூச்சுத் திணறலுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
எனினும் இவர் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது சடலத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த குடும்பப் பெண் கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில் தகனம் செய்யப்படவுள்ளது.