Loading...
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதில், குடும்பப் பெண்ணொருவர் சிறு காயமடைந்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் வீட்டிலேயே இன்று (14) அதிகாலை 5.30 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
Loading...
நேற்று முன்தினம் கொள்வனவு செய்த லிட்ரோ எரிவாயு சிலிண்டருடன் இணைக்கப்பட்ட எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதில், விரிவுரையாளரின் மனைவி சிறு காயமடைந்துள்ளார்.
இந்த வெடிப்பின் போது, வீட்டு கூரை சீற்றும் வெடித்துள்ளது.
Loading...