ஈகுவடார் நாட்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடார் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மொரோனா சாண்டியாகோ மாகாணத்தின் சுகுவோ நகரில் இருந்து 40இற்கு மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.
பேருந்து ஹூவாம்பி நகரில் உள்ள மக்காஸ்-லோஜா நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
அதிவேகமாக பேருந்து வீதியை விட்டு நகர்ந்து சென்ற போது, பயணிகள் அனைவரும் பயத்தில் மரண ஓலமிட்டு கதறியதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சராதி பேருந்தை நிறுத்த எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. இதை தொடர்ந்து, பேருந்து சாலையை விட்டு விலகி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த சக வாகன ஓட்டிகள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.