கொரோனா பாதிப்பால் கேரளாவில் 174 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 247 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,76,135 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் புதிதாக 6,984 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,377 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்பு 3 கோடியே 47 லட்சத்து 10 ஆயிரத்து 628 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 174 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 247 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,76,135 ஆக உயர்ந்தது.
கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பைவிட, தொற்று பாதிப்பில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த வகையில் நேற்று ஒரேநாளில் 8,168 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 46 ஆயிரத்து 931 (98.38 சதவீதம்)ஆக அதிகரித்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 87,562 ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இதுவரை இல்லாத அளவில் தற்போது குறைந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று 68,89,025 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 134 கோடியே 61 லட்சத்தை கடந்துள்ளது.
இதற்கிடையே நேற்று 11,84,883 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 65.88 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.