பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன்றாட உணவில் ஒரு அங்கமாக உள்ளது. பாலில் புரதம், கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட பிற சத்துக்கள் நிறைந்துள்ளன.
பாலை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்கின்றன. உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான பால் நம் எலும்புகளை பலப்படுத்துகிறது.
நமது உடல் ஆரோக்கியத்திற்கு பால் அவசியம் என்றாலும் பாலுடன் சில உணவுகளை சேர்த்துக்கொள்ளும் போது நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும். சரி வாங்க எந்த மாதிரியான உணவுகளை பாலுடன் சேர்க்க கூடாது என்பது குறித்து பார்க்கலாம்..
பால் சாப்பிடும்போது அதனுடன் பழங்கள், இறைச்சி, தேங்காய், வால்நட், தயிர், முட்டை, கொள்ளு, பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்து உண்ணக்கூடாது. அதுபோல முள்ளங்கி, பூண்டு, கீரைகள், முருங்கைக்காய் போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு பாலை குடிக்கக்கூடாது.
குறிப்பாக பால், தயிர் ஆகியவற்றோடு பழங்களை சேர்த்து சாப்பிடவே கூடாது. அப்படிச் சாப்பிட்டால் ஜீரண செயலில் ஈடுபட்டிருக்கக் கூடிய என்சைம்களின் செயலைத் தடுத்து உடலில் பல பிரச்சனைகளை தோற்றுவிக்கும். ஜீரண மண்டலத்தை பலவீனமாக்கும். உடலில் கபம், பித்தம் போன்றவற்றை உண்டாக்க தூண்டுதலாக விளங்கும்.
இறைச்சியில் அதிக புரோட்டீன் இருப்பதால் அது செரிமானம் ஆக பல மணி நேரம் எடுத்து கொள்ளும். இந்நிலையில், பாலை, இறைச்சியுடன் சேர்த்து சாப்பிட்டால் செரிமான மண்டலத்தில் அழுத்தத்தை கொடுத்து உடல் உபாதைகளை தரும்.