Loading...
திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில், 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தோப்பூர்- அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஹபீஸ் நளீம் (15வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
Loading...
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ஆடுகளின் உணவுக்காக இலை, குழைகள் வெட்டச் சென்ற சிறுவன், புதர் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த கைக்குண்டில் கத்தி பட்டு வெடித்ததில், குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பாக மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...