அதிமுக தலைவர்கள் சிலருடன் தீபா ரகசிய பேச்சு நடத்தி வருவதாகவும் அவர்களை இழுக்க முயற்சிப்பதாகவும் தகவல் பரவி வருவதை தீபா மறுத்துள்ளார்.
பிப்ரவரி 5ம் திகதி சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ள தீபா, எதிர்வரும் 24ம் திகதி ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தனது அரசியல் பயணத்தின் அறிவிப்பை வெளியிடுவேன் என அறிவித்துள்ளார்.
இதேசமயம் தீபா அதிமுக மேலிட தலைவர்களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதை கடுமையாக மறுத்துள்ள தீபா, நான் நானாகவே இருக்கிறேன், நான் அதிமுக தலைவர்களுடன் ரகசிய பேச்சு நடத்தியதாக வெளியாகி இருக்கும் தகவல் தவறு, அடிப்படை ஆதாரமற்றது.
எனது வீட்டின் முன்பு தினமும் மணிக்கணக்கில் திரண்டு நிற்கும் தொண்டர்களை பார்க்கிறேன், என்னை நம்பி வரும் அவர்களுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்.
அதே நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை வந்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது, தற்போது அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறேன் எனக் கூறியுள்ளார்.