இந்திய டெஸ்ட் அணியின் தலைவரான கோலி நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அளித்துள்ள பேட்டியில், கங்குலி சொன்ன ஒரு விஷயம் பொய் என்பது தெரியவந்துள்ளது.
கோலி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளதால், இந்திய அணி நாளை தென் ஆப்பிரிக்கா புறப்படவுள்ளது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெற்றது.
அப்போது, பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் கோலி பதில் அளித்து வந்தார். அதன் படி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து வெளிப்படையாக பேசினார்.
டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என முடிவு செய்தது என்னுடைய தனிப்பட்ட முடிவி, இதை நான் சரியான முடிவு என்று நினைத்தன் காரணமாகவே விலகினேன், கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என பிசிசிஐ-ல் இருந்து யாரும் கூறவில்லை என்று கூறினார்.
ஏனெனில் சில தினங்களுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டி ஒன்றில், டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தான் கூறியதாக தெரிவித்தார். ஆனால், தற்போது கோலி பிசிசிஐ-ல் இருந்து யாருமே கூறவில்லை என்று தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.