பிரித்தானியாவில் 12 வயது சிறுமி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Liverpool-ல் கடந்த நவம்பர் மாதம் 25-ஆம் திகதி 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் கழுத்தில் கத்தி குத்து காயங்களுடன் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொலிசார் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்து, சிறுமியை மீட்டு அருகில் உள்ள Alder Hey குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். சிறுமியின் மரணத்திற்கு முக்கிய காரணம் கழுத்தி ஏற்பட்ட கத்தி குத்து தான் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, உயிரிழந்த சிறுமியின் பெயர் Ava 12 வயது மதிக்கத்தக்க இவர், தன்னுடைய நண்பர்களுடன் வந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணையை துவங்கியுள்ள Liverpool நகரின் மூத்த பிரேத பரிசோதனை அதிகாரி Andre Rebello கூறுகையில், சிறுமியின் கழுத்தில் கத்தி குத்து பயங்கரமாக இருந்ததே அவரின் மரணத்திற்கு காரணம்.
இது தொடர்பான விசாரணை Liverpool நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது சிறுமியின் தாயார் தான் அடையாளம் கண்டார். கடந்த நவம்பர் மாதம் 25-ஆம் திகதி அன்று Liverpool நகர மையத்தில் நடந்த விளக்குகளை அணைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் படி இவர், உள்ளூர் நேரப்படி அன்றைய தினம் இரவு 8.33 மணிக்கு வில்லியம்சன் சதுக்கத்தில்(Williamson Square) இருந்தார். அதன் பின் அவர் அங்கிருக்கும் Church Alley-க்கு அப்பகுதியில் உள்ள தெரு வழியே நடந்து சென்ற போது, இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 14 வயது சிறுவன் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், இதன் விசாரணை வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும், சட்ட காரணங்களுக்காக சிறுவனி விபரம் வெளியிடப்படவில்லை என்றும் கூறினார்.
சிறுமியின் தந்தை, Robert Martin, எங்கள் குடும்பம் முற்றிலும் பேரழிற்குள்ளாகியுள்ளது. இதயம் உடைந்து போய் உள்ளோம் என்று வேதனையுடன் கூறினார்.