அவுஸ்திரேலியாவில் Jumping Castle என்னும் காற்று அடைக்கப்பட்ட விளையாட்டுத் தளம், காற்றில் பறந்ததில் இதில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர்.
டஸ்மனியா மாநிலத்தின் வடமேற்கில் உள்ள டெவோன்போர்ட்டில் உள்ள ஹில்கிரெஸ்ட் ஆரம்பப் பள்ளியில் ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்தின் போது இந்த விபத்து நடந்தது.
காயமடைந்தவர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளித்து ஹெலிகொப்டர்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காற்று ஊதப்பட்ட மிதவையில் எத்தனை குழந்தைகள் இருந்தனர் என்பது தெரியவில்லை.
இன்று நான்காம் தவணையின் இறுதிநாளாகும். உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் விபத்து நேர்ந்தது.
குழந்தைகள் சுமார் 10 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளனர்.
“திடீரென வலுவான காற்று வீசியதால்” மிதவை மேலே பறந்து இந்த விபத்து நேர்ந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.