Loading...
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் வீடு புகுந்து ரௌடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேத்தா மரத்தடி வீதியில் உள்ள வீடொன்றிற்குள் நேற்று (15) இரவு 10 மணியளவில் அத்துமீறி நுழைந்த ரௌடிகள் பொருட்களை உடைத்து நாசப்படுத்தியுள்ளனர்.
வீட்டுக்காரர்கள் கதவுகளை பூட்டிவிட்டு உள்ளே இருந்து விட்டனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டுள்ளனர்.
Loading...
வீட்டு வேலி தகரங்களையும் வெட்டி சேதப்படுத்தி விட்டு, தப்பி சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...