கண்டியில் உள்ள முன்னணி பெண்கள் கல்லூரி ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 20 வயதுடைய இளைஞனை இன்று (16) வரை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதவான் துமிந்த பிரபாத் முதுன்கொடுவ நேற்று உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த சிறுமி கடந்த 9ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டியை சேர்ந்த 20 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும், காணாமல் போன சிறுமி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பேராதனை பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.