Loading...
வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டைப் பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
இதன் போது கடலட்டை பண்ணையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
Loading...
அங்கு நின்ற பனை மரத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காண்பித்து, இதுதான் “பல்மேறா” (பனை மரம்) என தெரிவித்த போது சீன தூதுவர் பனைமரம் தொடர்பில் வினவினார்.
இதில் ரொடி (கள்) கிடைக்கும். மதுவகை என சைகை மூலம் காண்பித்து, இது உடம்புக்கு கேடு விளைவிக்காது என விளங்கப்படுத்திய போது, சீனத் தூதுவர் அதற்கு ஹா ஹா என சிரித்த சம்பவம் இடம்பெற்றது.
Loading...