சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட்போனை அடுத்து வரும் சில வாரங்களில் அறிமுகம் செய்யவுள்ளது.
Galaxy S8 எனும் குறித்த கைப்பேசியின் புகைப்படங்கள் உட்பட அதன் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
எனினும் தற்போது இவை அனைத்தும் இரகசியமான முறையில் கசிந்துள்ளன.
இதன்படி 5.8 அங்குல அளவு மற்றும் 6.2 அங்குல அளவுடைய தொடுதிரைகளைக் கொண்ட இரு பதிப்புக்களாக இக் கைப்பேசி வெளியாகவுள்ளது.
இவற்றில் Snapdragon 835 Processor பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.
தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் 5.8 அங்குல திரை கொண்ட கைப்பேசியில் 3,000 mAh மின்கலமும், 6.2 அங்குல அளவுடைய திரை கொண்ட கைப்பேசியில் 3,500 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளன.
இக் கைப்பேசி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி நியூயோர்க் நகரில் இடம்பெறும் எனவும் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.