ஒவ்வொருவருக்குமே நல்ல கச்சிதமான உடலைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த ஜங்க் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவதால், உடலில் கொழுப்புக்கள் தேங்கி, உடல் பருமனடைவதோடு, உடலமைப்பும் அசிங்கமாக மாறிவிடுகிறது.
உங்கள் உடல் எடையைக் குறைக்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும், எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லையா? அப்படியெனில் நீங்கள் பின்பற்றும் செயலில் ஏதோ தவறுள்ளது என்று அர்த்தம்.
இக்கட்டுரையில் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில பானங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பானங்கள் உடலின் மெட்டபாலிசத்தை உடனடியாக அதிகரிக்கும். சரி, இப்போது உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பானங்கள் குறித்து காண்போம்.
ஆப்பிள் பட்டை பானம் ஒரு ஆப்பிளை அரைத்து, அத்துடன் சிறிது பட்டைத் தூளை சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும்.
இதனால் அந்த பானத்தில் உள்ள அதிகமான பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் மெட்டபாலிசத்தை வேகமாக அதிகரித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பையும் வழங்கும்.
தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் புதினா பானம் இந்த பானத்தில் வைட்டமின்களான ஏ, பி6, சி, லைகோபைன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது.
இது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் பானங்களில் சிறப்பானது. அதற்கு சிறிது தர்பூசணி, புதினா மற்றும் ஸ்ட்ராபெர்ரியை ஒன்றாக அரைத்துக் குடிக்க வேண்டும்.
ஆரஞ்சு ராஸ்ப்பெர்ரி பானம் இந்த பானத்தில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், பீனோலிக் சேர்மங்கள் போன்ற புற்றுநோயைத் தடுக்கும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உட்பொருட்கள் உள்ளது.
அதற்கு ராஸ்ப்பெர்ரி மற்றும் ஆரஞ்சு ஜூஸை ஒன்றாக கலந்து குடிக்க வேண்டும்.
சியா பானம் சியா விதைகளை நீரில் ஊற வைத்து குடித்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைப்பதுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும்.
வெள்ளரிக்காய் பானம் இரவில் படுக்கும் முன், வெள்ளரிக்காயை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் குடிக்க வேண்டும்.
இந்த பானத்தில் வைட்டமின்கள், நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்றவை அதிகம் உள்ளது. இவை உடல் எடை வேகமாக குறைய உதவி புரியும்.
ஆப்பிள் சீடர் வினிகர் பானம் ஆப்பிள் சீடர் வினிகரில் நொதிகள் மற்றும் நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளது.
மேலும் இது இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
ப்ளூபெர்ரி ஆரஞ்சு பானம் ப்ளூபெர்ரி பழத்தை அரைத்து வடிகட்டி, அத்துடன் ஆரஞ்சு சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க, அதில் உள்ள வைட்டமின் சி, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதுடன், அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும்.
மஞ்சள் பானம் மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது. இது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
அதற்கு நீரில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.