அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் எப்படி உள்ளது என்பது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து முதல் ரிவ்வியூ வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மரக் கடத்தலை மைய்யப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
சமந்தா நடனம்
இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராக நடிக்கிறார். இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இரண்டாவது சிங்கிள் பாடல்
புஷ்பா படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கில் ஊ அண்டவா மாவா… ஊஊ அண்டவா மாவா என்றும் தமிழில் ஊ சொல்றியா மாவா… ஊஊ சொல்றியா மாவா என்றும் இப்பாடல் வெளியானது.
பாடலுக்கு கண்டனம்
இதேபோல் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. இதில் ஆண்களின் புத்தி அலையிற புத்தி என்பதை போன்ற வரிகள் இடம்பெற்றதால் இப்பாடலுக்கும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தது.
கர்நாடகாவிலும் எதிர்ப்பு
ஆந்திராவில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் இந்த பாடலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் தமிழிலும் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகத்திலும் புஷ்பா பாடலுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதனால் புஷ்பா படத்தை அங்கு ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
அமீரகத்தில் இருந்து ரிவ்வியூ
இந்நிலையில் புஷ்பா படத்தின் முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் திரைப்படம் இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புஷ்பா படத்தின் முதல் ரிவ்வியூ வெளியாகியுள்ளது.
ரேஸி… அன்ட் டெர்ரிஃபிக்…
அதாவது, வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினர் உமைர் சந்து, புஷ்பாவின் முதல் பாதியின் விமர்சனத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, புஷ்பா படத்தின் முதல் பாதி Racy Terrific… என்று பதிவிட்டுள்ளார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, சென்சார் போர்டில் புஷ்பாவின் திரையிடலை முடித்துவிட்டதாகவும், விரைவில் தனது முழு விமர்சனத்தையும் வெளியிடுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
படம் பிரம்மாதம்..
அவரது விமர்சனத்தின் படி புஷ்பா படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும் பிரம்மதாமாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சுகுமாறும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் பங்கேற்கவில்லை. அவர்கள் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்ததால் ப்ரி ரிலீஸில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.