பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் கடுமையான தமிழ் இனவாதி என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பிரதமர் ஓர் கடுமையான தமிழ் இனவாதியாவார். வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது.
நாடு என்ற வாகனத்தை செலுத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, அனைத்து நிறுவனங்களிலும் சிங்களவரல்லா, பௌத்தரல்லாதவர்களை நியமிக்கின்றார்.
குறைந்தபட்சம் இந்த நாட்டில் பிரஜாவுரிமை இல்லாதவர்களையே ரணில் உயர் பதவிகளில் நியமிக்கின்றார்.
வலுவான நிலையில் காணப்பட்ட ஆட்சியை கவிழ்த்து தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றிக்கொண்டது என கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.