Loading...
அதிகளவு தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டுமென பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி போன்று நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
Loading...
இவ்வாறான பல்கலைக்கழகங்கள் அதிகளவில் உருவாக்கப்படுவதன் மூலம் இலங்கை மாணவர்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழக கல்விக்காக செலவிடும் தொகை குறையும்.
இதனால் பாரியளவில் அந்நிய செலாவணியை சேமிக்க முடியும். நாட்டில் அனைவருக்கும் தேசிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க சந்தர்ப்பம் கிடைக்காது.மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரி ஓர் தேசிய சொத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...