2021 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிப்பெற்றது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி டிசம்பர் 14ம் திகதி வங்கதேசத்தில் தொடங்கியது.
இதில் இந்தியா, வங்கதேசம், தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 5 அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தியா-தென்கொரியா மோதி போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. இந்தியா தனது 2வது போட்டியில் வங்கதேசத்தை 9-0 என்ற கோல் கணத்தில் வீழ்த்தி முதல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலைியல், இன்று டிசம்பர் 17ம் திகதி இந்தியா தனது 3வது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது.
நான்காவது கால் பகுதி முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இத்தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இந்தியா.
இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் இரண்டு கோல் அடித்தார், ஆகாஷ்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். பாகிஸ்தான் வீரர் Junaid Manzoor ஒரு கோல் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியில் இந்தியா விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்வி என 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
தென்கொரியா விளையாடிய 2 போட்டிகளில் 2 டிரா என 2 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஜப்பான் விளையாடிய 2 போட்டிகளில் 2 டிரா என 2 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான் விளையாடிய 2 போட்டிகளில் 1 டிரா 1 தோல்வி என 1 புள்ளியுடன் 4வது இடத்தில் உள்ளது. வங்க தேசம் விளையாடிய 1 போட்டியில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.
இந்தியா டிசம்பர் 19ம் திகதி தனது கடைசி குரூப் போட்டியில் ஜப்பானை சந்திக்க உள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இதில் அதிகபட்சமாக இந்திய அணி 3 முறையும், பாகிஸ்தான் அணி 3 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இறுதி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.