அயிரை மீன் குழம்பு செய்யும் போது தேங்காய் பாலை மசாலா கொதி வரும்போது ஊற்றி, நன்றாக கொதித்த பின் அயிரை மீனைப் போட்டு இறக்கினால் குழம்பு ருசியாக இருக்கும்.
முட்டை குழம்பு செய்யும் போது தேங்காய் துருவலுடன் பெருஞ்சீரகத்தூளைச் சேர்த்து பசை போன்று அரைத்து குழம்பில் சேர்த்தால் முட்டை குழம்பு கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.
நெத்திலிக் கருவாடு வறுவல் செய்வதற்கு முன் ஒரு பாத்திரத்தில் கருவாடை போட்டு சிறிது வெந்நீரை ஊற்றி, சிறிது நேரம் கழித்து அதை சுத்தம் செய்து பிறகு வறுவல் செய்தால் கருவாடு சுவையாக இருக்கும்.
சிக்கன் குழம்பு செய்வதற்கு சிக்கனோடு கத்தரிக்காய் சேர்த்து செய்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.
முட்டை பொடிமாஸ் செய்யும் போது எண்ணெய் சேர்ப்பதற்கு பதிலாக வெண்ணெய் சேர்த்து இறக்கினால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.
கொண்டைக்கடலை சுண்டல் தாளிக்கும்போது இரண்டு கேரட்டை துருவி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கினால் சுவையாக இருக்கும்.
மண் பாத்திரம் வாங்கியதும் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து சற்று நேரம் சூடானதும் எடுத்து விட்டால் மண் வாசனையோ விரிசலோ ஏற்படாது.
முட்டை போண்டாவை நான்காக நீளவாக்கில் கீறி அதனுள் தேவையான மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.