கோவிட் பாதிப்புகள் அதிகரிப்பு மற்றும் Omicron மாறுபாடின் அச்சத்திற்கு மத்தியில், வரும் 2022 ஏப்ரல் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்க இத்தாலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இத்தாலியின் சுகாதார அமைச்சர் ஆண்ட்ரியா கோஸ்டா (Andrea Costa), மார்ச் மாத இறுதிக்குள் சிறிய குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி கிடைக்கும் என்றும், இந்த திசையில் அவர் “நம்பிக்கையுடன்” இருப்பதாகவும் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான நாடுகள் குழந்தைகளுக்கு COVID தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், இதுவரை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் தொற்று பாதிப்பு கடுமையாக எதுவும் பதிவாகவில்லை, மேலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தொற்று காரணமாக இறந்ததாகவும் கேள்விப்பட்டதே இல்லை.
தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதில் கோவிட் தடுப்பூசிகள் திறம்பட இல்லாவிட்டாலும், அவை பரவுவதற்கு எதிராக சில நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
டெய்லி மெயிலில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, சிறிய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது வயதான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வயதினருக்கு, குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடையே COVID தொற்று பரவுவதைத் தடுக்க உதவும் என்று அரசாங்கம் நம்புகிறது.
குழந்தைகளுக்கான தடுப்பூசி இயக்கங்களை வழக்கமாக நடத்திவந்த நாடுகளும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான 70% தடுப்பூசி விகிதத்தை அடைவதில் சிரமம் உள்ளது.
உதாரணமாக, ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான நாடுகளை விட பிரித்தானியா அதன் 18 வயதுக்கு மீறப்பட்ட பெரியவர்களுக்கு வேகமாக தடுப்பூசியை செலுத்தியது, ஆனால் அதன் ஒட்டுமொத்த விகிதம் பின்னர் 68 சதவீதமாக நிறுத்தப்பட்டது.
இருப்பினும், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் 80 சதவிகிதம் மற்றும் 90 சதவிகிதம் தடுப்பூசி விகிதங்களை அடைந்துள்ளன, ஏனெனில் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி வ வழங்க தொடங்கிவிட்டனர்.