முதன்முறையாக இந்தியாவில் சர்வைவர் நிகழ்ச்சியினை பிரபல ரிவி ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது.
ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் 16 பேர் கலந்து கொண்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக இந்நிகழ்ச்சியும் மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது.
கடந்த மூன்று மாதங்களில் எந்த வசதியும் இல்லாத தீவில் தான் போட்டியாளர்கள் தங்கியிருந்தார்கள். உணவு, இருப்பிடம் தான் எதுவும் இல்லாமல் அவர்கள் நிகழ்ச்சியில் விளையாடி இருந்தனர்.
போட்டிகளும், சவால்களும் மிகவும் கடுமையாகவே இருந்தது என்று கூறலாம். இந்நிலையில் சமீபத்தில் முடிந்த இந்த போட்டியின் வெற்றியாளராக விஜி வெற்றிப்பட்டத்தை தட்டியதுடன் ஒரு கோடி ரூபாய் பரிசையும் பெற்றுள்ளார். இவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.
இந்நிலையில் விஜயலட்சுமி இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் காலில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகின்றது. மேலும் அவர் கூறுகையில், “Nothing worth having comes easy” அதாவது எதுவும் ஈசியாக கிடைத்து விடாது என்று கூறி உள்ளார். இதை பார்த்த சில பேர் ஒரு கோடி ரூபாய் பரிசு சும்மா கிடைக்குமா? என்ற கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.