உணவு வகைகளில் பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுவீர்கள். ஆனால் சில வகையான உணவுகளை தான் எப்போதாவது செய்து சாப்பிடுவோம். அந்த வகையில், சுவையான மட்டன் உப்புக்கண்டத்தை எளிதாக எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஆட்டு இறைச்சி – 1 கிலோ
பூண்டு – 20 பல்,
காய்ந்த மிளகாய் – 15
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்
முதலில், ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். அதனோடு, பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
இந்த விழுதினை நறுக்கி வைத்த கறியில் சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா நன்றாக பிடித்தவுடன் இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் காய வைக்கவும்.
ஈரம் வற்றும் வரை இரண்டு மூன்று நாட்கள் வரை காய வைக்கவும். நன்றாக காய்ந்த உடன் காற்று புகாதா டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது. தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து அம்மிக்கல்லில் தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.
இப்போது சுவையான ருசியான உப்புக்கண்டம் ரெடி. இதை தயிர்சாதம், தக்காளி சாதம் பல உணவுகளுக்கு ஊறுகாய் போல தொட்டு சாப்பிடலாம்….