தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
தேவையான பொருட்கள் :
தேங்காய்ப்பால் – 1 கப்
கடலை மாவு – 1 டீஸ்பூன்
பொடித்த வேர்க்கடலை – 1 டீஸ்பூன்
வெள்ளரிக்காய் – 1 (நறுக்கவும்)
தக்காளி – 1 (நறுக்கவும்)
கொத்தமல்லிதழை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – சிறிதளவு
சீரகம் – கால் டீஸ்பூன்
உப்பு, மிளகு தூள் – தேவைக்கு
செய்முறை:
வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய்ப்பால், கடலை மாவு இரண்டையும் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் ப.மிளகாய், சீரகம் போட்டு தாளித்த பின்னர், வெள்ளரிக்காய், தக்காளியை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மாவு கரைசலை ஊற்றி கிளறவும்.
அடுத்து அதில் வேர்க்கடலை, மிளகுதூள், உப்பு, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
ருசியான தேங்காய்ப்பால் வேர்க்கடலை சூப் தயார்.