Loading...
தென்ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கிய ஒமைக்ரான் வைரஸ், தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்டா வகையை விட ஒன்றரை நாள் முதல் 3 நாளில் ஒமைக்ரான் வைரஸ் இரு மடங்காக அதிகமாக பரவுகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Loading...
இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்த்துகல், ஸ்கொட்லாந்து, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட 89 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Loading...