திருகோணமலையில் புதையல் பொருளொன்றினை கடத்த முற்பட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான புதையல் பொருளொன்றினை கடத்த முற்பட்ட இருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கந்தளாய் மற்றும் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மறைந்திருந்து சுற்றிவளைப்பு மேற்கொண்டு சந்தேக நபர்களை புதையல் பொருளுடன் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் புதையலில் பெறப்பட்ட பழங்கால பொருளொன்றினை திருகோணமலை பகுதியிலிருந்து கொழும்புக்கு கடத்துவதற்கு முயன்ற நிலையில் கைது செய்துள்ளனர்.
தொல் பொருள் தொடர்பான அறிக்கைகளை பெறவுள்ளதோடு, சந்தேக நபர்கள் கந்தளாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.